Monday, April 8, 2013

மருத்துவ குறிப்புகள் - 1


புதினா துவையல் வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்ல மருந்து.
எலுமிச்சை சாறு தேன்கலந்து பருக வரட்டு இருமல் குணமாகும்.
மாதுளம் பழச்சாறு,எலுமிச்சை பழ சாறு கலந்து குடித்து வந்தால் சளித்தொல்லை குணமாகும்.
படுக்கைக்குச் செல்லும்முன் மாதுளம் பழம் சாப்பிட குடல் புழுக்கள் அழியும்.
கோவைப் பழம் சாப்பிட பல் வலி நிவாரணம் பெறலாம்.
குடல்புண் குணமாகவும்,வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திக்கீரை நல்ல உணவு.
தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.
அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.
முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.