கோபம் ஒரு கைபிடியில்லாத
வாள் , அது பயன்படுத்துவோரின் கையையும் பதம்பார்த்துவிடும்.இக்கோபத்தால் தங்கள் சொந்தவாழ்க்கையும்,
சமூக வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு சிரமப்படுவர்கள் பலர்.
இதற்கு உளவியில்
ரீதியாக அடிப்படைக்காரணங்களாக திகழ்பவை
1.
வெறுப்பு
2.
பொறாமை
3.
சந்தேககுணம்
4.
பழிவாங்கும்
உணர்ச்சி
இக்குணங்கள் ஒவ்வொரு
மனிதரிலும் வெவ்வேறு அளவில் இருக்கின்றன.
சிலர் வெளிப்படையாக
தமது உணர்ச்சியைக் காட்டி கொள்கின்றனர்,பிறர் தங்களுக்குள்ளே புகைந்து கொண்டிருப்பார்கள்.
BP – ரத்த அழுத்தம்,
நரம்புதளர்ச்சி, இருதய நோய்கள் வருவதற்கு கோப உணர்ச்சியும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
படிப்பின்மீது
, வேலை மீது , உறவினர்களின் மீது , சில பொருள்களின் மீது , காய்கறிகள் , உணவுப்பொருட்களின்
மீது ,புகை , மது அருந்துவரிகளைக் கண்டால் என எத்தனையோ விதங்களில் வெறுப்புணர்ச்சியை
வெளிப்படுத்துகின்றனர்.
அதுபோலவே மனிதர்களிடையே
சக தொழிலாளி தன்னை விட ஒருபடி திறமை ,வசதி வாய்ப்புள்ளவாரக இருந்தால்,மற்ற பெண்கள்
தன்னை விட அழகாக ஆடை மற்றும் அதிக ஆபரணங்கள் அணிந்திருந்தால், தனக்கு தெரிந்தவர் புதிதாக
பெரிய வீடு கட்டியிருந்தால், கார் , பைக் என வாகனங்கள் வாங்கிருந்தால் இன்னும் பல காரணங்களில்
பொறாமை குணம் உள்ளூர இருந்து கொண்டே இருக்கும்.
மிகப் பெரிய ஆபத்தான
எதிர்மறை குணம் சந்தேகம்.அது பேயை விட பயங்கரமானது . மனைவி வேறு ஆணுடன் சகஜமாக பழகினால்
கணவனுக்கு சந்தேகம், அதுபோல் கணவன் இன்னொரு பெண்ணைப் பார்த்தாலும், சிரித்துப் பேசினாலும்
தவறான உறவு இருக்குமோ என்று மனைவிக்கு சந்தேகம்,கல்லூரி செல்லும் மகன்/மகள் கெட்ட சகவாசம்
இருக்குமோ என பெற்றோருக்கு சந்தேகம் கடைக்காரர்கள் ஏமாற்றி விடுவார்களோ என பலருக்கு
சந்தேகம் . இப்படியாக எங்கும் எதிலும் சந்தேகப்படக்கூடிய நபர்கள் இருக்கதான் செய்கிறார்கள்.
இத்தகைய எதிர்மறை
தீய குணங்களால் பாதிக்கபட்டவர் எப்போதும் யாருடனும் சண்டைப்போட்டுக்கொண்டும், எல்லோருடைய
வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டு தம் வாழ்க்கையை மட்டுமின்றி தங்களை நம்பி இருப்பவர்களையும்
தொல்லைக்குட்படுத்தி அவதிப்படுகின்றனர்.
வெறுப்பு, பொறாமை
, சந்தேகம், பழிவாங்கும் உணர்ச்சி தீய குணங்கள் நீங்கி அன்பு , பாசம் , நம்பிக்கை ஏற்பட
அவரவர் மனக்குறிகளுக்கு ஏற்ப மலர் மருந்துகளான வில்லோ, ஹாலி, வைன் , செர்ரி , லார்ச்
பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறோம்.